சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கு திசையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். வள்ளியும், தெய்வானையும் இருபுறங்களிலும் தனித்தனியே மயில் மீதமர்ந்து காட்சி தருகின்றனர். மலைஅடிவாரத்தில் ஒரு கோயில் உள்ளது. அது கீழ்க்கோயில் என்று அழைக்கப்படுகிறது. மலைமீது இருப்பது மலைக்கோயில் எனப்படுகிறது. 144 படிகள் உள்ளது. இங்கு மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன. இத்திருக்கோயிலில் பங்குனி உத்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. |